சென்னை: புயல்மழை பாதிப்புகளை சுட்டிக் காட்டி தமிழக அரசின் செயல் பாட்டை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது சமூக வலைதள பதிவு: எவ்வளவு பெரியபுயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந் தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர் என்ற நம்பிக் கையுடன் தான் மக்கள் இருப்பர். ஆனால், குறைந்தபட்ச பாது காப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளைக் கூடச் செய்யா மல் அவர்களை பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல?
மக்களைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்கான நிரந் தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலைமாற் றம் மற்றும் பேரிடர் பாதுகாப்பு சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை. எவ்வகையிலாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைத் துக்கொள்ளலாம் என்றம் எல்லா வற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்றம் மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததே இல்லை.
எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க்கட்சிகள் மீது ஏளன மாக விமர்சனம் வைத்து, காவி வண்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணும் தற்போதைய ஆட்சி யாளர்கள், எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர்.
» ‘ரெட் அலர்ட்’ விடுத்தும் நடவடிக்கை எடுக்காத திமுக அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு
» வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் டிச. 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
பல மாவட்டங்களில் வெள்ள நீர் வடியவில்லை. மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. வெள்ள நீர் முழு வதுமாக வடியும் வரை தவெக வினர், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க வேண்டும். இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.