‘ரெட் அலர்ட்’ விடுத்தும் நடவடிக்கை எடுக்காத திமுக அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

By KU BUREAU

சேலம்: வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்​தும் திமுக அரசு முன்னெச்​சரிக்கை நடவடிக்கை எடுக்​காத​தால், அதிக பாதிப்பு ஏற் பட்​டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

சேலம் கந்தம்​பட்டி பகுதி​யில் கனமழை​யால் ஏற்பட்ட பாதிப்புகளை நேற்று பார்​வை​யிட்ட பழனிசாமி, பின்னர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

ஏற்காடு மலை மற்றும் சேலத்​தில் பெய்த தொடர் மழையால் திரு​மணி​முத்​தாற்றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட்டு, கரையோரம் உள்ள வீடு​களில் மழை நீர் புகுந்​துள்ளது. சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதி​களில் தண்ணீர் தேங்​கி​யுள்​ளது. பாதிப்பு ஏற்பட்​டுள்ள இடங்​களில் அதிமுக நிர்​வாகிகள் மக்களுக்கு உதவி புரிந்து வருகின்​றனர்.

திரு​மணி​முத்​தாற்றில் முறையாக தூர்​வாராத​தால்​தான் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு, குடி​யிருப்பு​களில் மழை நீர் புகுந்​துள்ளது. உரிய முறை​யில் முன்னெச்​சரிக்கை நடவடிக்கைகள் எடுக்​கப்​பட்​டிருந்​தால் இந்நிலை உருவாகி​யிருக்​காது.

புயல் காரணமாக விழுப்பு​ரம், திரு​வண்ணா​மலை, கிருஷ்ணகிரி, கள்ளக்​குறிச்சி மாவட்​டங்கள் கடுமையாக பாதிக்​கப்பட்​டுள்ளன. வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்​தவுடன் உரிய முன்னெச்​சரிக்கையை திமுக அரசு எடுத்​திருந்​தால், இவ்வளவு பாதிப்பு ஏற்பட்​டிருக்​காது.

அதேபோல, சாத்​தனூர் அணையில் இருந்து நள்ளிர​வில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கனஅடி நீரை முன்னறி​விப்பு இல்லாமல் திறந்து விட்​டுள்​ளனர். இதனால் நூற்றுக்​கும் மேற்​பட்ட கிராமங்கள் பாதிக்​கப்​பட்​டுள்ளன. தென்​பெண்​ணை​யாற்றின் கரை உடைந்​த​தால், விழுப்புரம் நகரில் தண்ணீர் புகுந்து பாதிப்பு அதிகரித்​துள்ளது.

உரிய முன்னெச்​சரிக்கை எடுக்​காத, திறமையற்ற முதல்வர் மாநிலத்தை ஆள்கிறார். அரசின் அலட்​சி​யத்​தால் தென்​பெண்ணை ஆற்றங்​கரையோர மக்கள் பாதிக்​கப்​பட்​டுள்ளனர். இது கடும் கண்டனத்​துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE