புதுச்சேரியில் 21 அரசு பள்ளிகள், பாகூர் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை விடுமுறை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் புயல் விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. தண்ணீர் தேங்கியுள்ள, முகாம்களாகவுள்ள 21 அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. வெள்ளநீர் சூழ்ந்துள்ள பாகூர் கொம்யூனிலுள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வெளியிட்ட அறிக்கையில்: "புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நாளை புதன்கிழமை முதல் செயல்படும். தண்ணீர் தேங்கியுள்ள, மழை நிவாரண முகாம்களாக உள்ள 22 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுகிறது.

விடுமுறை விடப்படும் பள்ளிகள் விவரம்: ”தவளக்குப்பம், காக்காயன் தோப்பு, மூலகுளம், கூனிச்சம்பேட், கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர், கிருஷ்ணாவரம், மணமேடு ஆகிய 9 அரசு தொடக்கப் பள்ளிகள், பண்டசோழநல்லூர், மணலிப்பட்டு, பூரணாங்குப்பம், டிஎன்பாளையம், பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளிகள், உறுவையாறு, மங்கலம், திருக்கனூர், பனித்திட்டு, அரசு உயர்நிலைப் பள்ளிகள், கரையாம்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட் சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூனிச்சம்பேட் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்படுகிறது. மேலும் பாகூர் கொம்யூனில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE