கொளத்தூரில் முதல்வர் ஆய்வு: மருத்துவமனையில் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்

By KU BUREAU

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்​தூர் தொகு​தி​யில் மழை பாதிப்புகளை நேற்று பார்​வை​யிட்​டார். கொளத்தூர் செல்வி நகர் பகுதி​யில் மாநக​ராட்சி அமைத்​துள்ள 1.50 லட்சம் லிட்டர் கொள்​ளளவு கொண்ட தொட்​டி​யில் சேகரிக்​கப்​படும் மழை நீர், நெடுஞ்​சாலைத் துறை​யின் வடிகாலில் மோட்​டார் பம்ப் மூலம் வெளி​யேற்​றப்​படுவதை ஆய்வு செய்​தார். சுற்றி​யுள்ள பகுதி​களில் மழைநீர் தேங்​காதவாறு நடவடிக்கை எடுக்க அலுவலர்​களுக்கு உத்தர​விட்​டார்.

சீனிவாசன் நகரில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்​வை​யிட்​டார். மழைக்கால நோய்களுக்கான மருந்துகளை கையிருப்​பில் வைத்​துக் கொண்டு, உரிய சிகிச்சை அளிக்​கு​மாறு மருத்​துவர்​களிடம் அறிவுறுத்​தினார். ஜிகேஎம் காலனி​யில் சென்னை பெருநகர குடிநீர் வழங்​கல், கழிவுநீர் அகற்று வாரி​யத்​தின் உந்து நிலைய செயல்​பாட்டை ஆய்வு செய்​தார். 24 ‘A’ சாலை​யில் உள்ள குளத்தை மேம்​படுத்​தும் பணிகளை பார்​வை​யிட்​டார்.

பெரி​யார் நகர் அரசு புறநகர் மருத்​துவ​மனை​யில் முதல்​வர் ஆய்வு செய்தார். அப்போது ஜெனரேட்​டர், அத்தி​யா​வசிய மருந்​துகளை தயாராக வைத்​திருக்​கு​மாறு மருத்​துவர்​கள், பணியாளர்​களிடம் அறிவுறுத்தினார். உள்நோ​யாளி​களாக சிகிச்சை பெறு​பவர்​களிடம் நலம் விசாரித்ததோடு உணவு, மருந்துகள், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்​டறிந்​தார். ஆய்வின்​போது, அமைச்​சர்கள் கே.என்​.நேரு, சேகர்​பாபு, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், மேயர் பிரியா, மாநக​ராட்சி ஆணையர் குமரகுருபரன், குடிநீர் வாரிய மேலாண் இயக்​குநர் டி.ஜி.​வினய், நகர ஊரமைப்பு இயக்கக இயக்​குநர் பி.கணேசன் ஆகியோர் உடன் இருந்​தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னை சேப்​பாக்கம் எழிலக வளாகத்​தில் உள்ள மாநில அவசரகால செயல்​பாட்டு மையத்​துக்கு முதல்வர் சென்​றார். மழையால் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்​டங்​களில் மீட்பு, நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்​கப்​பட்​டுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி​யர்​கள், கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரை காணொலி​யில் தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலவரம் குறித்து கேட்​டறிந்​தார்.

முதல்வர் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘தூங்கி வழிந்த நிர்வாகத்தால், மனித தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம். இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்கு திரும்பிடும் காலம் நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம்’ என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE