பெரியார் விருதுக்கு டிச.20-க்குள் விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: சமூகநீதிக்காக பாடு​படு​பவர்களை சிறப்புசெய்ய “சமூகநீ​திக்கான தந்தை பெரி​யார் விருது” 1995-ம் ஆண்டு​ முதல் வழங்​கப்​பட்டு வருகிறது. இவ்விருதைப் பெறு​வோருக்கு ரூ.5லட்சம் விருது தொகையும்,ஒரு பவுன் தங்கப்​ப​தக்​க​மும்,தகுதி​யுரை​யும் வழங்​கப்படும்.

இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் “சமூகநீ​திக்கான தந்தை பெரி​யார் விருது” வழங்க உரிய விரு​தாளரை தேர்ந்​தெடுக்க பரிந்​துரைகள் வரவேற்​கப்​படு​கிறது. எனவே சமூகநீதிக்காகபாடு​பட்டு பொது​மக்​களின் வாழ்க்கைத் தரத்தை மேம்​படுத்த, மேற்​கொள்​ளப்​பட்ட பணிகள் மற்றும் அதன்பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகளை உடைய​வர்கள் தங்களது விண்​ணப்​பத்தை சென்னை மாவட்ட ஆட்சி​யருக்கு அனுப்பி வைக்​கலாம்.

விண்​ணப்​பங்கள் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூகநீ​திக்காக பாடு​பட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்​கியதாக இருத்தல் வேண்​டும். விண்​ணப்​பங்கள் வரும் டிச.20-ம் தேதிக்​குள் மாவட்ட ஆட்சி​யர் அலு​வல​கம் வந்து சேர வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE