வேளாண் உற்பத்தியை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

By KU BUREAU

சென்னை: தமிழகத்​தில் வேளாண் உற்பத்​தியை தொடர்ந்து அதிகரிக்க வேண்​டும் என்றும் கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்​வளத் துறை​யின்​கீழ் அறிவிக்​கப்​பட்டு நடைபெற்று வரும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்​டும் என்றும் அமைச்​சர்​கள், அதிகாரி​களுக்கு முதல்வர் மு.க.ஸ்​டா​லின் உத்தர​விட்​டுள்​ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: வேளாண் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்​துறை, கால்நடை பராமரிப்பு, பால்​வளம், மீன்​வளத் துறை​களின் பணிகள் குறித்த ஆய்வுக்​கூட்டம் நேற்று தலைமைச் செயல​கத்​தில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தலைமை​யில் நடைபெற்​றது. இதில், கடந்த 2021-22 முதல் 2024-25 வரையில் இந்த 3 துறைகள் சார்​பில் வெளி​யிடப்​பட்ட மானியக் கோரிக்கை அறிவிப்பு​கள், முதல்​வரின் அறிவிப்பு​களின் தற்போதைய நிலை குறித்​தும் நடைபெற்று வரும் பணிகள் குறித்​தும் ஆய்வு செய்​தார். தமிழகத்​தில் வேளாண் உற்பத்​தியை தொடர்ந்து பெருக்​குதல், விவசா​யிகளுக்கு தேவையான துறை சார்ந்த திட்​டங்களை சிறப்​பாக​வும், தரமாக​வும் வழங்க முதல்வர் அறிவுறுத்​தினார்.

மேலும் இக்கூட்​டத்​தில், வேளாண்​துறை சார்​பில் நாகப்​பட்​டினம், நாகூரில் நெய்தல் பாரம்​பரிய பூங்கா அமைத்​தல், ஈரோட்​டில் ரூ.10 கோடி​யில் மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்​துதல், தருமபுரி​யில் மா மகத்துவ மையம், திருநெல்​வேலி​யில் நெல்லி மகத்துவ மையம் ஆகியவை ரூ.6 கோடி​யில் அமைக்​கும் பணிகள், தூத்​துக்​குடி மாவட்டம் கிள்​ளி​குளம் வேளாண்​மைக் கல்லூரி​யில் ரூ.15 கோடி​யில் வாழை ஆராய்ச்சி நிலை​யம், தமிழ்​நாடு சிறு​தானிய இயக்​கத்​தின் கீழ் ரூ.65.30 கோடி​யில் மேற்​கொள்​ளப்​படும் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்​தார்.

தமிழ் வளர்ச்சி: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்​ துறை சார்​பில் உலக அளவில் போற்றப்​படும் தமிழ்ப் படைப்புகளை வெவ்​வேறு மொழிகளில் மொழிபெயர்க்​கப்​படும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்​சீப்வேதநாயகத்​துக்கு மயிலாடு துறை​யில் ரூ.3 கோடி​யில் அரங்கம் மற்றும் சிலை அமைக்​கும் பணிகள், தண்டை​யார்​பேட்டை காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சகபணியாளர்​களுக்கு ரூ.34.54 கோடியில் புதிய குடி​யிருப்பு​கள். பரமக்​குடி​யில் இம்மானுவேல் சேகரனாருக்கு சிலை​யுடன் கூடிய மணிமண்டபம், சிதம்​பரத்​தில் இளையபெரு​மாளுக்கு நூற்றாண்டு நினைவரங்கம் அமைத்​தல், வள்ளுவர் கோட்​டத்​தில் ரூ.80 கோடி​யில் புனரமைப்பு பணி உள்ளிட்​டவை​ குறித்​தும் முதல்வர் ஆய்வு செய்​தார்.

நவீன மீன்​ சந்தைகள்: கால்நடை பராமரிப்பு, பால், மீன்​வளத் துறை சார்​பில் சென்னை துறை​முகப் பொறுப்​புக் கழகத்​துடன் இணைந்து சென்னை, காசிமேட்​டில் உள்ள மீன்​பிடி துறை​முகத்தை மேம்​படுத்​தும் பணிகள், கடலூர், பெரியகுப்​பம், புதுக்​குப்பம் மற்றும் சி.புதுப்​பேட்டை​யில் ரூ.25 கோடி​யில் கடல் அரிப்பு தடுப்பு சுவர்​களுடன் கூடிய புதிய மீன் இறங்​குதளங்கள் அமைத்தல் மற்றும் சென்னை, செங்​கல்​பட்டு, கிருஷ்ணகிரி, திண்​டுக்​கல், மதுரை மாவட்​டங்​களில் ரூ.50 கோடி​யில் நவீன மீன்​ சந்தைகள் அமைத்​தல், அம்பத்​தூர் பால் பண்ணை​யில் ரூ.10 கோடி​யில் பணிகள், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்​தி​யாளர்கள் ஒன்றி​யத்​தில் ரூ. 50 கோடி பால் பதப்படுத்​தும் ஆலைக்கான பணிகள் குறித்​தும் ஆய்வு செய்​தார். அப்போது கடந்​தாண்​டு​களில் அறிவிக்​கப்​பட்டு நடைபெறும் பணிகளை துரிதமாக முடிக்க உத்தர​விட்​டார்.

கூட்​டத்​தில், துறை அமைச்​சர்கள் எம்.ஆர்​.கே.பன்னீர்​செல்​வம், மு.பெ.சாமிநாதன், அனிதா ஆர்.ரா​தாகிருஷ்ணன், ஆர்.எஸ். ராஜகண்​ணப்​பன், தலைமைச் செயலர் நா.முரு​கானந்​தம் பொதுப்​பணித் துறை செயலர் மங்கத்​ராம் சர்மா, வேளாண்​துறை செயலர் அபூர்வா, நி​தித்​துறை செயலர் த.உதயச்​சந்​திரன், ​கால்நடை பராமரிப்பு, பால்​வளம், மீன்​வளத்​துறை செயலர் சத்யபிரத சாஹு, செய்தித்​துறை இயக்​குநர் இரா.​வைத்​திநாதன் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE