மோசமான வானிலை: குடியரசு தலைவரின் திருவாரூர் வருகை ரத்து

By KU BUREAU

திருவாரூர்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்​சிகளில் கலந்து கொள்​வதற்காக தமிழகம் வந்துள்ளார். உதகை ராஜ்பவனில் தங்கி​யுள்ள அவர், நீலகிரி மாவட்​டத்​தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்​சிகளில் கலந்​து​கொண்​டார்.

திரு​வாரூரில் உள்ள தமிழ்​நாடு மத்திய பல்கலைக்​கழகத்​தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழா​வில் குடியரசுத் தலைவர் பங்கேற்று, மாணவ, மாணவி​களுக்கு பட்டங்களை வழங்​கு​வார் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதற்காக கோவை​யில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து ஹெலி​காப்டர் மூலம் திரு​வாரூர் செல்​வார் எனவும் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்நிலை​யில், மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் திரு​வாரூர் பயணம் திடீரென ரத்து செய்​யப்​பட்​டுள்ளதாக பல்கலைக்​கழகம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE