அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது; வாரிசு அரசியலுக்கு இங்கு இடமில்லை: இபிஎஸ் திட்டவட்டம்

By KU BUREAU

சேலம்: மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்​தில், முதல்வர் ஸ்டா​லின் நாடக​மாடு​கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

சேலத்​தில் செய்தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மதுரை மாவட்டம் நாய்க்​கன்​பட்டி பகுதி​யில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசுக்கு, திமுக அரசு கடிதம் எழுதி​யுள்​ளது. ஆனால், தற்போது மக்கள் எதிர்ப்புத் தெரி​வித்​தவுடன், அதை ரத்து செய்ய வேண்​டும் என்று கடிதம் எழுதி முதல்வர் ஸ்டா​லின் நாடக​மாடு​கிறார்.

வணிகக் கட்டிடங்​களுக்கான வாடகைக்கு 18 சதவீதம்ஜிஎஸ்டி வரி விதிப்​பால், வியாபாரிகள் கடுமை​யாகப் பாதிக்கப்​படு​வார்​கள். டெல்டா மாவட்டங்​களில் மழையால் பாதிக்கப்​பட்ட விவசா​யிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்​டும். அதிமுக ஆட்சி​யில் சொத்து வரி உயர்த்​தப்​பட​வில்லை. திமுக ஆட்சி​யில் சொத்து வரியைஉயர்த்தி​யதுடன், அதிமுக மீது பழிபோடு​கிறார்​கள். சொத்து வரி குறைக்​கப்​படும் என தேர்​தலின்​போது திமுக அளித்த வாக்​குறுதி என்னவானது? முல்லை பெரி​யாறு பாசனப் பகுதிகளை பாது​காக்​கப்​பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்​டும். கூட்​ட​ணிக்கு வருபவர்கள் கோடிக்​கணக்​கில் பணம் கேட்​பதாக முன்​னாள் அமைச்சர் திண்​டுக்கல் சீனிவாசன் கூறி​யுள்​ளார். கூட்​ட​ணிக் கட்சிகளுக்கு திமுக​வினர் கொடுத்​ததைத்​தான், அவர் குறிப்​பிட்​டுள்​ளார்.

அதிமுக கள ஆய்வுக் கூட்​டங்​களில் கலவரம் நடப்​பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​யுள்​ளார். திமுக கூட்​டத்​தில்​தான் கலவரம் நடந்​தது. அதை மறந்​து​விட்டு அவர் பேசுகிறார். திமுக எம்.பி. திருச்சி சிவா வீட்​டிலேயே அக்கட்​சி​யினர் தாக்​குதல் நடத்​தினர். இதுபோல கலவரம் செய்வது திமுக​வினர்​தான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாததால், குற்றச்செயல்களைத் தடுக்க முடியவில்லை. இனியாவது தமிழகத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

அதிமுக யாருக்கும் அடிமை கிடை​யாது. சுதந்​திரமாக செயல்​படும் கட்சி. வாரிசு அரசி​யலுக்​கும் இங்கு இட​மில்லை. உழைப்​பவர்​கள் ​யாராக இருந்​தா​லும், உரிய ப​தவிக்கு வரலாம். இவ்​வாறு பழனிசாமி கூறினார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE