சென்னையில் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு  தீவிர சிகிச்சை: முதல்வர் நேரில் நலம் விசாரித்தார்

By KU BUREAU

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்​.இளங்​கோவனுக்கு சென்னை தனியார் மருத்​துவ​மனை​யில் தீவிர சிகிச்சை அளிக்​கப்​படு​கிறது. அவரது உடல்​நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்​டா​லின் நேரில் சென்று விசா​ரித்​தார். தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலைவர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்​தவர் ஈவிகேஎஸ்​. இளங்​கோவன், தற்போது ஈரோடு கிழக்கு சட்டப்​பேர​வைத் தொகுதிஉறுப்​பினராக உள்ளார்.

இந்நிலை​யில், அவர், காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை, மணப்​பாக்​கத்​தில் உள்ள தனியார் மருத்​துவ​மனை​யில் கடந்த 11-ம் தேதி அனும​திக்​கப்​பட்​டார். இந்நிலை​யில் அவருக்கு நுரை​யீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்​யப்​பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்தது. அவரது உடல் நிலை​யில் நேற்று முன்​தினம் சற்று பின்னடைவு ஏற்பட்​டதைத் தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மருத்​துவ​மனைக்​குச் சென்று, ஈவிகேஎஸ்​.இளங்​கோவனின் உடல்​நிலை குறித்து மருத்​துவர்கள் மற்றும் அவரது குடும்பத்​தினரிடம் கேட்​டறிந்​தார். அப்போது, பொதுப்​பணித்​துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகா​தா​ரத்​துறை அமைச்சர் மா.சுப்​பிரமணி​யன், தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்​தகை, காங்​கிரஸ் செய்தித் தொடர்​பாளர் கோபண்ணா ஆகியோர் உடனிருந்​தனர்.

பின்னர் செய்தி​யாளர்​களிடம் பேசிய செல்​வப்​பெருந்தகை, ‘‘இளங்​கோவனுக்கு ஏற்கெனவே ஃபேஸ்​மேக்கர் பொருத்​தப்​பட்​டுள்​ளது. தற்போது மூச்சு விடு​வ​தில் திணறல் ஏற்பட்டு, சிகிச்சை அளிக்​கப்​படு​கிறது. தீவிர சிகிச்சை பிரி​வில் அனைத்து மருத்துவ உதவி​களும் சிறந்த முறை​யில் அளிக்​கப்​படு​கின்றன. அவர் குணமடைந்து மீண்​டும் வருவார். வரும் 9-ம் தேதி சட்டப்​பேரவை கூட இருக்​கிறது. சட்டப்​பேர​வை​யில் அவரது குரலைக் கேட்க ஆவலோடு இருக்​கிறோம்” என்று தெரிவித்தார். ​

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE