மழையால் பயிர்கள் பாதிப்பு; யாருக்கெல்லாம் இழப்பீடு? - வேளாண் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தகவல்

By KU BUREAU

தஞ்சாவூர்: தொடர் மழையால் பயிர்​களின் பாதிப்பு 33 சதவீதம் அளவுக்கு மேல் இருந்​தால் இழப்​பீடு வழங்​கப்​படும் என்று வேளாண்​மைத் துறை அமைச்சர் எம்.ஆர்​.கே.பன்னீர்​செல்வம் கூறினார்.

தஞ்சாவூர், திரு​வாரூர், நாகை, மயிலாடு​துறை மாவட்​டங்​களில் கடந்த 2 நாட்​களாக தொடர்ந்து மழை பெய்​தது. இதனால், இளம்சம்பா, தாளடி நெற்​ப​யிர்கள் நீரில் மூழ்​கி​யுள்ளன. இந்நிலை​யில், தஞ்சாவூர் மாவட்டம் உக்கடை பகுதி​யில் மழையால் மூழ்​கி​உள்ள நெற்​ப​யிர்களை அமைச்​சர்கள் எம்.ஆர்​.கே.பன்னீர்​செல்​வம், கோவி.செழியன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்​தனர்.

அப்போது, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை அமைச்​சரிடம் விவசா​யிகள் காண்​பித்து, உரிய நிவாரணம் வழங்​கு​மாறு கோரிக்கை விடுத்​தனர். பின்னர் அமைச்சர் எம்.ஆர்​.கே.பன்னீர் செல்வம் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தொடர் மழையால் தஞ்சை மாவட்​டத்​தில் 2,367 ஏக்கர், மயிலாடு​துறை, கடலூர் மாவட்​டங்​களில் 8,250 ஏக்கர், நாகை மாவட்டத்​தில் 19,202 ஏக்கர், திரு​வாரூர் மாவட்​டத்​தில் 2,395 ஏக்கர், ராமநாத​புரம் மாவட்​டத்​தில் 2,055 ஏக்கர், திரு​வண்ணாமலை மாவட்​டத்​தில் 87 ஏக்கர் என தமிழகம் முழு​வதும் 34,356 ஏக்கர் நெற்​ப​யிர்கள் நீரில் மூழ்​கியது முதல்​கட்ட கணக்​கீட்​டில் தெரிய​வந்​துள்ளது.

வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரி​கள், மழைநீரில் மூழ்கி சேதமடைந்​துள்ள பயிர்​களின் விவரங்களை கணக்​கீடு செய்​யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்​றனர். பயிர்​களில் 33 சதவீதம் அளவுக்கு மேல் பாதிப்பு இருந்​தால், உரிய இழப்​பீடு வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும். மழைநீர் சூழ்ந்த குடி​யிருப்பு​களில் வசிக்​கும் மக்களை பாது​காப்பான இடங்​களில் தங்கவைக்க ஏற்பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்​சர்​கள், மாவட்ட ஆட்சி​யர்​கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் உள்ளிட்​டோர் பாதிக்​கப்​பட்ட இடங்​களுக்​குச் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று ஏற்கெனவே முதல்வர் உத்தர​விட்​டிருந்​தார்.

மழைக்​காலம் தொடங்​கும் முன்பே ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்​கால்கள் தூர் வாரப்​பட்​டுள்ளன. இப்பணிக்கு தஞ்சாவூர் மாவட்​டத்​தில் மட்டும் ரூ.75 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டிருந்​தது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ஒரத்​தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் பகுதி​யில் மழைநீரில் பயிர்கள் மூழ்​கி​உள்ள பகுதிகளை அமைச்​சர்கள் ஆய்வு செய்​தனர். மாநிலங்​களவை உறுப்​பினர் எஸ்.கல்​யாணசுந்​தரம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.அர​விந்த், மாவட்ட ஆட்சியர் பா.பிரி​யங்கா பங்கஜம், திரு​வை​யாறு எம்எல்ஏ துரை.சந்​திரசேகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்​தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE