மாமல்லபுரம் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு: தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

By KU BUREAU

மாமல்லபுரம் / சென்னை: செங்​கல்​பட்டு மாவட்​டம், மாமல்​லபுரத்தை அடுத்த பண்டிதமேடு பகுதி​யில் கார் மோதிய விபத்​தில் அப்பகு​தியை சேர்ந்த 5 பெண்கள் சம்பவ இடத்​திலேயே நேற்று உயிரிழந்​தனர். இந்த விபத்​தில் உயிரிழந்​தோர் குடும்பத்​துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்​டா​லின் உத்தர​விட்​டுள்​ளார்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மாமல்​லபுரத்தை அடுத்த பண்டிதமேடு என்ற பகுதி​யில் உள்ள கழுவேலி இடங்​களில் அப்பகு​தியை சேர்ந்த பொது​மக்கள் மேய்ச்​சலுக்காக கால்​நடைகளை அழைத்து வருவது வழக்​கம். இந்நிலை​யில், நேற்று பெண்கள் சிலர் கால் ​நடைகளை அழைத்​துக் கொண்டு பழைய மாமல்​லபுரம் (ஒஎம்​ஆர்) பையனூர் மதுரா பாண்​டிமேடு சந்திப்​பில் சாலை​யோரம் நின்​றிருந்​ததாக தெரி​கிறது.

அப்போது, திருப்​போரூரில் இருந்து மாமல்​லபுரம் நோக்கி சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்​பாட்டை இழந்து சாலை​யோரம் இருந்த பெண்கள் மீது மோதி​யதாக கூறப்​படு​கிறது. இதில், காயமடைந்த திருப்​போரூர் வட்டம் பையனூர் கிராமம், பாளை​யத்​தம்மன் கோயில் தெரு​வைச் சேர்ந்த ஆனந்​தாயி (71), யசோதாம்​மாள் (54), லோகம்​மாள் (56), கவுரி (52), விஜயா (53) ஆகிய 5 பெண்கள் சம்பவ இடத்​திலேயே உயிரிழந்​தனர். தகவல் அறிந்த மாமல்​லபுரம் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்​கொண்​டனர்.

இதையடுத்து, இச்சாலை​யில் அதிவேகமாக வாகனங்கள் இயக்​கப்​படு​வ​தாக​வும், அதனால், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படு​வ​தாக​வும், விபத்தை ஏற்படுத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்​தி​யும் அப்பகு​தி​யைச் சேர்ந்த பொது​மக்கள் ஓஎம்ஆர் சாலை​யில் மறியலில் ஈடுபட்​டனர். இதில், உயிரிழந்த நபர்​களின் குடும்பத்​தினருக்கு இழப்​பீடு, அரசு வேலை​வாய்ப்பு வழங்க வேண்​டும் என்ற கோரிக்கையை வலியுறுத்​தினர்.

உயர் அதிகாரி​களிடம் தெரி​வித்து உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என போலீஸார் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்​றனர். மேலும், சம்பவ இடத்​துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், சார் ஆட்சியர்நாராயண சர்மா ஆகியோர் வந்து ஆய்வு செய்​தனர். இந்த சம்பவத்​தால் அச்சாலை​யில் சுமார் 2 மணி நேரத்​துக்கு போக்கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது.

முதல்வர் இரங்கல்: முதல்வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள இரங்கல் செய்தி​யில், “மாமல்​லபுரத்​தில் நிகழ்ந்த விபத்​தில் 5 பெண்கள் சம்பவ இடத்​திலேயே உயிரிழந்​தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்​சி​யும் வேதனை​யும் அடைந்​தேன். இவ்விபத்​தில் உயிரிழந்​தவர்​களின் குடும்பத்​தினருக்​கும் அவர்​களது உறவினர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலை​யும் ஆறுதலை​யும் தெரி​வித்​துக் ​கொள்​கிறேன். உயி​ரிழந்​தவர்​களின் குடும்பத்​துக்கு தலா ரூ.2 லட்​சம் ​முதல்​வரின் பொது நிவாரண நி​தியி​லிருந்து வழங்க உத்​தர​விட்​டுள்​ளேன்” என்​று தெரி​வித்​துள்​ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE