பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கோவையில் அனைத்து அரசுத்துறை ஓய்வூதியர்கள் தர்ணா

By இல.ராஜகோபால்

கோவை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து அரசுத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் செவ்வாய்கிழமை (நவ.26) கோவை சிவானந்தா காலனி பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மதன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் அரங்கநாதன் சிறப்புரை வழங்கினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊரக நூலகர்கள், வன காவலர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். அனைவருக்கும் கட்டணமில்லா மருத்துவ காப்பீடு வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE