முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பாமக மறியல்: கரூரில் 31 பேர் கைது 

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: முதல்வரை கண்டித்து கரூரில் பாமக ஆர்ப்பாட்டம், மறியல் செய்தனர். இதில் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாமக நிறுவனர் ராமதாஸை முதல்வர் அவமரியாதையாக பேசியதைக் கண்டித்து கரூர் மாவட்ட பாமக சார்பில் இன்று (நவ.26ம் தேதி) கரூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அனுமதியில்லாததால் பாதுகாப்புக்காக டிஎஸ்பிக்கள் செல்வராஜ் (கரூர் நகரம்), முத்துசாமி (மாவட்ட குற்றப்பிரிவு), இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கரூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்ய முயன்றபோது சாலையில் அமர்ந்து மறியல் செய்தவரை போலீஸார் எழுப்பி தூக்குகின்றனர். | படம்: க.ராதாகிருஷ்ணன்

மாவட்ட செயலாளர் பிஎம்கே பாஸ்கரன் தலைமை வகித்தார். முதல்வரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் தலைமையில் போலீஸார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து பாஸ்கரன் உள்ளிட்ட 31 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE