ராமதாஸ் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து: தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாமகவினர் 30 பேர் கைது 

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்த கருத்து தொடர்பாக முதல்வருக்கு எதிராக பாமகவினர் பல்வேறு மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி தெற்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் பி.கே.திலீப்குமார் தலைமையில் முதல்வருக்கு எதிராக தடையை மீறி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

மாவட்ட அமைப்புச் செயலாளர் வி.எழிலரசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹரிஹரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.கே.ஜே ரபிக், ஒன்றிய செயலாளர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமகவினரை போலீஸார் தடுத்தனர். இதனால் போலீஸாருக்கும் பாமகவினருக்கும் இடையே சிறு வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட செயலாளர் திலீப்குமார் உட்பட 30 பேரை போலீஸார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து, மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE