வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் 14 லட்சம் பேர் விண்ணப்பம்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தகவல்

By KU BUREAU

சென்னை: தமிழகத்​தில் 4 நாட்கள் நடத்​தப்​பட்ட வாக்​காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்​களில் பெயர் சேர்க்க 8.38 லட்சம் விண்​ணப்​பங்கள் உட்பட மொத்தம் 14 லட்சம் விண்​ணப்​பங்கள் பெறப்​பட்​டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்​தின் அறிவுறுத்​தல்​படி, வரும் 2025 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, புகைப்​படத்​துடன் கூடிய வாக்​காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் கடந்த அக்டோபர் 29-ம் தேதி தொடங்​கின.

ஏற்கெனவே அறிவித்​த​படி, முதல்​கட்​டமாக கடந்த நவம்பர் 16, 17-ம் தேதி​களில் சிறப்பு முகாம்கள் நடத்​தப்​பட்டன. இந்த நிலை​யில், 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நவம்பர் 23, 24-ம் தேதி​களில் அனைத்து சட்டப்​பேரவை தொகு​தி​களி​லும், வாக்​குச்​சாவடி அமைவிடங்​களில் நடைபெற்றன.

இந்த 2-ம் கட்ட முகாமில், வாக்​காளர் பட்டியலில் பெயர் சேர்த்​தல், நீக்​கல், திருத்​தல், இடமாற்​றம், ஆதார் எண்ணை இணைப்​ப​தற்காக படிவங்கள் பெறப்​பட்டன. அதன்படி பெயர் சேர்க்க 3 லட்​சத்து 95,981 விண்​ணப்​பங்​கள், வெளி​நாடு வாழ் இந்தி​யர்​களின் 4 விண்​ணப்​பங்​கள், ஆதார் இணைப்​புக்கு 364, பெயர் நீக்கம் செய்ய 75,573, திருத்தம் மேற்​கொள்ள 2 லட்​சத்து 43,180 என மொத்தம் 2 நாட்​களில் 7 லட்​சத்து 15,102 விண்​ணப்​பங்கள் பெறப்​பட்டன.

4 நாட்கள் நடைபெற்ற முகாமிலும் சேர்த்து, பெயர் சேர்க்க 8 லட்​சத்து 38,016, வெளி​நாடு வாழ் இந்தி​யர்கள் பெயர் சேர்க்க 4, ஆதார் இணைப்​புக்கு 783, பெயர் நீக்கம் செய்ய 1 லட்​சத்து 19,701, திருத்தம் மேற்​கொள்ள 4 லட்​சத்து 42,111 என மொத்​தம் 14 லட்​சத்து 615 ​விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்ளன. இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE