ஸ்டாலின் அரசு மீண்டும் அமைய உறுதியேற்போம்: பிறந்தநாளையொட்டி திமுகவினருக்கு உதயநிதி வேண்டுகோள்

By KU BUREAU

சென்னை: ‘‘​முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தலைமையிலான `திராவிட மாடல்’ அரசு மீண்​டும் அமைவதற்கான உறுதியை எனது பிறந்த நாளில் என்னுடன் சேர்ந்து ஏற்றுக் கொள்​ளுங்​கள்’’ என்று திமுக​வினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட சமூக வலைதள பதிவு: நவ. 27-ம் தேதி என் பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி, தமிழகம் முழு​வதும் திமுக​வினர் பல்வேறு நிகழ்ச்​சிகளை நடத்தி வருகின்​றனர். அனுபவம் வாய்ந்த தலைமைக்கழக பேச்​சாளர்​களுடன் இணைந்து பங்கேற்​பதன் மூலம் இளம் பேச்​சாளர்கள் மேலும் பட்டை தீட்​டப்​படு​கின்​றனர்.

என்னைப் பொறுத்​தவரை பிறந்​தநாள் என்பது மற்ற நாள்​களைப் போலவே அதுவும் ஒரு நாள்​தான். தந்தை பெரி​யார், பேரறிஞர் அண்ணா, மு.கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் போன்ற​வர்கள் தங்கள் பிறந்​தநாளை இயக்​கத்​துக்கான கொள்​கைத் திரு​விழாவாக மாற்றிக்​காட்​டினர். அந்த வகையில், என் பிறந்​தநாளைக் கொண்டாட விரும்​பும் கழகத்​தோழர்​களும் அதை ஆக்கப்​பூர்​வமான மக்கள் பணிக்​கும் கழகப்​பணிக்​கும் பயன்​படுத்​திக் கொள்​ளவேண்​டும். திராவிட இயக்​கத்​தின் கொள்​கைகள், திராவிட மாடல் அரசின் சாதனை​களை​யும் மக்களிடம் எடுத்​துச்​செல்​லும் நிகழ்வுகளை நடத்த வேண்​டும்.

கட்சி முன்னோடிகளை நேரில் கண்டு, உரிய வகையில் இளைஞரணி​யினர் கவுரவிக்க வேண்​டும். ஏழை அடித்​தட்டு மக்களுக்கான நலத்​திட்ட உதவிகளை வழங்க வேண்​டும். பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் பாதிக்​கப்​படும் சூழல் வந்தால் நிவாரணப் பணிகளை மேற்​கொள்​வ​தில் இளைஞர் அணியினர் தங்களை முழு​மையாக ஈடுபடுத்​திக் கொள்ள வேண்​டும். என் பிறந்​தநாளை முன்னிட்டு, ஃபிளெக்ஸ் பேனர்கள் வைப்​ப​தை​யும் சுற்றுச்​சூழலுக்கு மாசு ஏற்படுத்​தும் வகையில் பட்டாசுகள் வெடிப்​ப​தை​யும் கழகத்​தோழர்கள் முற்றி​லும் தவிர்க்க​வேண்​டும். அவற்​றைத் தவிர்த்து​விட்டு, ஆக்கப்பூர்​வமான செயற்​பாடு​களில் கழகத்​தினர் கவனம் செலுத்துவதே எனக்கு மகிழ்ச்​சி​யளிக்​கும். 2026-ல் வெற்றி​பெற்று முதல்வர் மு.க.ஸ்​டாலின் தலைமையிலான `திராவிட மாடல்’ அரசு மீண்​டும் அமைவதற்கான உறு​தியை இந்​தப் பிறந்​தநாளில் என்னுடன் சேர்ந்து கழகத்​தோழர்​களும் ஏற்றுக்​கொள்​ளுங்​கள். இதுவே என் பிறந்​தநாள் வேண்​டு​கோள். இவ்​வாறு அந்த பதிவில் உதயநிதி ஸ்டாலின் தெரி​வித்​துள்​ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE