ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக மரபு வார விழாவையொட்டி நாணயக் கண்காட்சி திங்கட்கிழமை நடைபெற்றது.
உலக மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க வேண்டி ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம், 1988ம் ஆண்டு முதல் ஒவ்வொர் ஆண்டும் நவம்பர் திங்கள் 19 முதல் 25 வரை உலக மரபு வாரமாகக் கொண்டாடி வருகிறது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக மரபு வார விழாவையொட்டி நாணயக் கண்காட்சி திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் பாண்டியர் கால நாணயங்கள், ராஜராஜ சோழன் நாணயங்கள், பழமையான பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள், தற்காலத்தில் வெளியிடப்பட்ட தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும் ஓலைச்சுவடி, 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரே மரத்தால் செய்யப்பட்ட சங்கிலி வடிவிலான அகப்பை தூக்கி போன்றவைகளும் காட்சிப் படுத்தப்பட்டன. தலைமையாசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன், இடைநிலை ஆசிரியை ஜெஸிந்தா ஆகியோர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
» சென்னை உட்பட 9 துறைமுகங்களிலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» வாரத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி: தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது