மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கீழ்மருவத்தூரில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபான பாட்டில்கள் வாங்குவதற்காக, அதிகளவில் மதுபிரியர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும், அந்த வழியாகச் செல்லும் பெண்களை சிலர் கிண்டல் செய்து, விஷமச் செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது தவிர, விவசாய நிலங்களுக்கு அருகில் மதுக்கடை அமைந்துள்ளதால் அங்கேயே அமர்ந்து மது அருந்துவதுடன், பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே வீசிவிட்டுச் செல்வதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், உரிய அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
» சென்னை | தலைமை செயலக பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு
» மொழியையும், கலையையும் கண்போல் காப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி