தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விஜய் விருந்து அளித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கடந்த மாதம் 27-ம் தேதி தனது முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். இந்நிலையில், மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயிகளை கவுரவிக்கும் வகையில், அவர்களை நேரில் அழைத்து விருத்து அளிக்க விஜய் முடிவு செய்தார். இதையடுத்து, நில உரிமையாளர்கள், விவசாயிகள் என 37 குடும்பங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு நேற்று பேருந்தில் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மதியம் ஒரு மணி அளவில் கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜய், நில உரிமையாளர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடி, மாநாட்டுக்கு இடம் கொடுத்ததற்காக சால்வை அணிவித்து, நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினருடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர், அவர்களுக்கு தன் கைப்பட அறுசுவை உணவைப் பரிமாறினார்.
மேலும், மாநாட்டுக்கு பந்தல் அமைத்தவருக்கு விஜய் தங்க மோதிரம் பரிசளித்தார். பின்னர், மதியம் 2 மணியளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். விஜய் உடனான சந்திப்பு மற்றும் விருந்து நிகழ்ச்சியில் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
» ஐயப்ப சுவாமி குறித்து அவதூறு பாடல்: இயக்குநர் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி மீது புகார்
» மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் முடிவுகள் ஹைலைட்ஸ் - டாப் 10 விரைவுச் செய்திகள்