நெசவாளர்களுக்கு தொழில்வரி விதிக்க கூடாது: தமிழக அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி வெளி​யிட்ட அறிக்கை: கைத்தறி மற்றும் நெசவாளர்​களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து​வோம் என்று பல்வேறு வாக்​குறு​திகளை அளித்து ஆட்சி​யைப் பிடித்த ஸ்டா​லினின் திமுக ஆட்சி​யில் நூல் விலை உயர்ந்​தது. இலவச சீருடை, இலவச வேட்டி, சேலை போன்ற திட்​டங்​களுக்கான பணிகளை முழு​மையாக தமிழக நெசவாளர்​களுக்கு வழங்​க​வில்லை.

இதுபோன்ற நிகழ்வு​களால், நெசவாளர்​கள் வாழ்க்கையை மிகுந்த சிரமத்​துடன் நடத்தி வருகின்​றனர். இந்நிலை​யில், தமிழகம் முழு​வதும் குடிசைத் தொழில்போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்​து​வரும் நெசவாளர்கள் வீட்​டில், தறிகள் உள்ள இடங்களை உள்ளாட்​சித் துறை அலுவலர்கள் கணக்​கிட்டு, அப்பகு​தி​களுக்கு வணிகரீ​தி​யில் தொழில் வரி விதிக்கப் போவதாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

எனவே, தமிழகமெங்​கும் இதுபோன்ற கணக்​கீடு செய்​யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்​டும். நூலுக்கான வரிகளை முழு​மையாக நீக்​க​வும், கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தயாரிக்​கப்​படும் ஜவுளி​களுக்கு ஜிஎஸ்டி விலக்கு பெற்று, மீண்​டும் தமிழகத்​தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்​ப​தற்​குத் தேவையான அனைத்து நட​வடிக்கைகளை​யும் ​விரைந்து எடுக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்கை​யில் கூறப்​பட்டுள்​ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE