தமிழகத்தின் தேவையை வலியுறுத்தி கடுமையாக பேசுங்கள்: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

By KU BUREAU

சென்னை: நாடாளு​மன்​றத்​தில் மென்​மையாக பேசக்​கூடாது; கடுமையாக பேசி தமிழகத்​தின் தேவையை வலியுறுத்த வேண்​டும் என்று திமுக எம்.பி.க்​களுக்கு முதல்வர் ஸ்​டா​லின் அறிவுறுத்​தி​யுள்​ளார்.

டெல்​லி​யில் நாடாளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடர் வரும் நவ.25-ல் தொடங்கி, டிச.20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு,சென்னை அண்ணா அறிவால​யத்​தில், தமிழக முதல்​வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்​டா​லின் தலைமை​யில் திமுக நாடாளு​மன்ற உறுப்​பினர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்​றது.

இக்கூட்​டத்​தில், பொதுச்​செய​லாளர் துரை​முரு​கன், மக்களவை, மாநிலங்​களவை உறுப்​பினர்கள் பங்கேற்​றனர். பின்னர் முதல்வர் ஸ்டா​லின் பேசிய​தாவது: நம் கொள்​கை​களில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று ‘இண்​டியா’ கூட்டணி உறுப்​பினர்​களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பேசுங்​கள். மாநில அரசை நடத்து​வ​தில் நாம் எதிர்​கொண்​டிருக்​கும் மிகப்​பெரிய பிரச்​சினையே நிதி நெருக்​கடி​தான். எனவே, நிதி உரிமைகளை பெறும் வகையில் பேச்சு அமைய வேண்​டும்.

மத்திய அரசின் பெரிய திட்​டங்கள் தமிழகத்​துக்கு வருவ​தில்லை என்ப​தைக் குறிப்​பிட்டுப் பேசி, புதிய திட்​டங்களை தமிழகத்​துக்​குக் கொண்டுவர முயற்சிக்க வேண்​டும். மென்​மை​யாகப் பேசக் கூடாது. கடுமை​யாகப் பேச வேண்​டும். வர இருக்​கும் சட்டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற நாடாளு​மன்ற உறுப்​பினர்கள் முழு​மையான பங்களிப்​பைக் கொடுக்க வேண்​டும். எம்எல்ஏ, எம்.பி.,க்களை விட கட்சி​யில் மாவட்டச் செயலா​ளர்​தான் முக்​கிய​மானவர்​கள். அவர்​களுக்​குரிய மரியாதையை கொடுக்க வேண்​டும்.

தொகுதி மேம்​பாட்டு நிதியை முழு​மை​யாகப் பயன்​படுத்​துங்​கள். எம்.பி.க்கள் அனைத்து சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கும் பயணம் செய்யுங்கள். மாநில உரிமை​களுக்​காக, தமிழக அரசின் கோரிக்கைகளுக்​காக, தொகுதி மக்களின் தேவை​களுக்​காக, நாடாளு​மன்றப் பணிகளைத் திட்​ட​மிட்டுச் செயல்​படுத்​துங்​கள். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்​தினார்.

கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள்: கடந்த 10 ஆண்டு​களாக மத்திய பாஜக அரசால் தமிழகம் வஞ்சிக்​கப்​படு​கிறது. தமிழகத்​துக்காக மிகப்​பெரிய திட்டம் என ஒன்றுகூட செயல்​படுத்​தப்​பட​வில்லை.

பாஜக அரசின் பாசிச ​தன்​மைக்கு எ​திராக​வும், இந்தியா​வில் கூட்​டாட்​சித் தத்து​வத்தை நிலைநாட்​ட​வும் ​தி​முக​வின் நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் தங்​களது ஜனநாயகக் கடமையை உறு​தியாக எடுப்​போம். இவ்​வாறு தீர்​மானத்​தில்​ கூறப்பட்டுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE