கரூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று (நவ. 22ம் தேதி) தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (நவ.22ம் தேதி) மதியம் 11.45 மணிக்கு நடைபெற்றது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லோக நாயகி, துணை முதல்வர் நளினி, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா, இருப்பிட மருத்துவர் குமார், கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எரிந்து சாம்பலாகும் வகையிலான ஏ பிரிவு தீ, எண்ணெய் போன்ற பி பிரிவு தீ, காஸ் மூலம் ஏற்படும் சி பிரிவு தீ, மின் கசிவால் ஏற்படும் டி பிரிவு தீ, உலோக பொருட்களில் ஏற்படும் இ பிரிவு தீ என 5 வகையான தீக்களை தண்ணீர், மணல், ஈரத் துணி, தீயணைப்பான், காஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி எப்படி அணைப்பது என தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதில் மாணவ, மாணவிகள், மருத்துவமனை பணியாளர்கள், பாதுகாவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்று தீயை அணைத்தனர். மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE