தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் - ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை: பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

By KU BUREAU

சென்னை: தமிழகத்​தில் ரவுடி​யிச​மும், குற்​றங்​களும் குறைந்​துள்ளன. தனிப்​பட்ட கொலைகளுக்​கும் சட்டம் - ஒழுங்​குக்​கும் சம்பந்​தமில்லை என்பதை பழனிசாமி புரிந்​து​கொள்ள வேண்​டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்​. பாரதி தெரி​வித்​துள்ளார்.

சென்னை அண்ணா அறிவால​யத்​தில் செய்தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: கள்ளக்​குறிச்சி விவகாரத்​தில் சிபிஐ விசா​ரணைக்கு சென்னை உயர் நீ்தி​மன்றம் உத்தர​விட்டது குறித்து பழனிசாமி அறிக்கை வெளி​யிட்​டுள்​ளார். முதலில் அவர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக தன்னை பரிசீலித்​துக் கொள்ள வேண்​டும்.

கடந்த 2018-ல் நெடுஞ்​சாலைத்​துறை​யில் ரூ.4800 கோடி ஊழல் தொடர்பாக திமுக சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டது. நாங்கள் கோரா​விட்​டாலும், நீதி​மன்றம் சிபிஐ விசா​ரணைக்கு உத்தர​விட்​டது. அதற்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் பழனிசாமி தடை பெற்​றார். நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க​வில்லை. ஆனால், கள்ளக்​குறிச்சி விவகாரத்​தில், தமிழக அரசு உச்ச நீதி​மன்றம் செல்லக் கூடாது என பழனிசாமி தெரி​வித்​துள்ளார்.

கடந்த 2016-ல் திருப்​பூர் அருகே தேர்தல் நேரத்​தில் ரூ.570 கோடி லாரி​யில் பிடிபட்​டது. கோவை​யில் இருந்து கொண்டு​ வரப்​பட்ட நிலை​யில், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் திமுக சார்​பில் வழக்கு தொடுத்​தோம். 2017-18-ல் சிபிஐ விசா​ரணைக்கு உத்தர​விடப்​பட்​டது. இதுவரை விசாரணை தொடங்​கப்​பட​வில்லை. சிபிஐ விசாரணை எப்படி இருக்​கும் என்ப​தற்கு இதுவே உதாரணம். எனவே, சிபிஐ விசா​ரணையை எப்போதும் நாங்கள் கோரு​வ​தில்லை.

துரித நடவடிக்கை: கள்ளக்​குறிச்சி சம்பவத்​தில், முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து, 57 மருத்​துவர்களை உடனே சம்பவ இடத்​துக்கு அனுப்பி வைத்​ததுடன், மாவட்ட ஆட்சியர் மாற்​றப்​பட்டு, எஸ்பி​யும் சஸ்பெண்ட் செய்​யப்​பட்​டார். சம்பந்​தப்​பட்​ட​வர்கள் கைது செய்​யப்​பட்​டனர். ஆனால், பழனிசாமி இந்த வழக்​கில் மேல்​முறை​யீடு செல்​லக்​கூடாது, சட்டம் - ஒழுங்கு கெட்டு​விட்டது என்கிறார். தனிப்​பட்ட கொலைகளுக்​கும் சட்டம் ஒழுங்​குக்​கும் சம்பந்​தமில்லை.

இதை பழனிசாமி புரிந்து கொள்ள வேண்​டும். ஓசூர் நீதி​மன்ற சம்பவம், தஞ்சை ஆசிரியை கொலை இரண்​டுமே தனிப்​பட்ட விவகாரங்​களால் நடைபெற்​றவை. தூத்​துக்​குடி உயிரிழப்பு​தான் சட்டம் - ஒழுங்கு பிரச்​சினை. பழனிசாமி முதல்​வராக இருந்த​போது, கோடநாட்​டில் பணியில் இருந்த காவலாளி உட்பட 5 கொலைகள் நடந்​துள்ளதுடன், பணமும் கொள்​ளை​யடிக்​கப்​பட்​டுள்​ளது.

அதிமுக ஆட்சி​யில் கும்​பகோணம் தனியார் பள்ளி ஆசிரியை கொலை, பெரம்​பலூர் அருகில் பட்டப்​பகலில் ஆசிரியை குத்​திக் கொலை, ராமநாத​புரம் ஆட்சியர் அலுவல​கத்​தில் ஆசிரியை படுகொலை, கோவை​யில் கல்லூரி ஆசிரியை கழுத்து அறுத்து தீ வைத்து கொலை போன்ற சம்பவங்கள் நடந்​துள்ளன. இவையெல்​லாம் சட்டம் - ஒழுங்கு பிரச்​சினை என எடுத்​துக்​கொள்ள முடி​யுமா?

அதிமுக ஆட்சியில் கொலைகள்: தற்போதைய ஆட்சி​யில் தமிழகத்​தில் குற்​றங்கள் குறைந்​துள்ளன. அதிமுக ஆட்சி​யில் 2020-ல் 1,672 கொலைகள் நடந்​துள்ளன. அதேநேரம் நடப்​பாண்​டில் கடந்த ஜூன் வரை 792 கொலைகள் நடந்​துள்ளன. காவல்​துறை​யின் கடும் நடவடிக்கை இனியும் தொடரும். சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்​பேற்ற பின், மண்டல​வாரியாக அதிகாரிகளை நியமித்​த​தால் சென்னை​யில் ரவுடி​யிசம் குறைந்​துள்ளது.

இவ்வாறு அவர் தெரி​வித்​தார். அதைத்​தொடர்ந்து, “கொலை நடந்த இடம் பள்ளி, மருத்​துவ​மனை, நீதி​மன்றம் ஆகிய இடங்​களாக இருக்​கிறதே?” என்ற செய்தி​யாளர்​களின் கேள்விக்கு, “நடந்த சம்பவங்களை நியாயப்​படுத்​தவில்லை. அதற்காக வருத்​தப்​படு​கிறோம். அரசு உடனடி நடவடிக்கை எடுத்​தது. சில சம்பவங்கள் தவிர்க்க முடியாத நிலை​யில் உள்ளன” என்​றார்.

மேல் முறையீடு செய்யப்படுமா? - மேலும், “கள்​ளக்​குறிச்சி ​விவ​காரத்​தில் சிபிஐ ​விசா​ரணைக்கு எ​திராக மேல் ​முறை​யீடு செய்​வீர்​களா?” என்​றதற்கு, “அரசு​தான் ​முடிவு செய்​யும். கட்சி நிலைப்​பாட்டை சொல்​லி​யிருக்​கிறேன்​” என்​றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE