மதி அங்காடி மூலம் ரூ.51 லட்சத்​துக்கு விற்பனை: மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் தகவல்

By KU BUREAU

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்​களின் பொருட்கள் கடந்த ஓராண்​டில், மதி அனுபவ அங்காடி மூலம் ரூ.51 லட்சத்​துக்கு விற்​பனை​யாகி உள்ளதாக தமிழக அரசு தெரி​வித்​துள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்​களின் இயற்கை சந்தை போலவே, சுய உதவிக் குழுக்​களின் உற்பத்தி பொருட்களை நகர பகுதி​யில் விற்பனை செய்ய ஏதுவாக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சார்​பில் மதி அனுபவ அங்காடி தொடங்​கப்​பட்​டது.

அதன்படி கடந்த 2023 நவ.18-ம் தேதி சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்​தில் மதி அனுபவ அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். தமிழகத்​தில் உள்ள 37 மாவட்​டங்​களில் இருந்து சுய உதவிக் குழுக்​களின் பொருட்கள் கொள்​முதல் செய்​யப்​பட்டு, மதி அனுபவ அங்காடி மூலம் நகர்ப்புற பகுதி​களில் விற்பனை செய்​யப்​பட்டு வருகிறது.

அதன்படி கொள்​முதல் செய்​யப்​பட்ட கைவினை பொருட்​கள், கைத்தறி துணி​கள், அலங்கார பொருட்​கள், ஆபரணங்​கள், சிலைகள், பெட்​சீட், சிறு​தானி​யங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்து வகை பொருட்​களும் அங்காடி​யில் விற்பனை செய்​யப்​படு​கின்றன.

வாரத்​தின் அனைத்து நாட்​களி​லும் காலை 9 மணி முதல் இரவு 8.30 வரை இயங்​கும் மதி அனுபவ அங்காடியை பொது​மக்கள் அணுகி தேவையான பொருட்களை வாங்கி செல்​கின்​றனர்.

அந்த வகை​யில் கடந்த ஆண்டில் தொடங்​கப்​பட்ட மதி அனுபவ அங்காடி தற்போது ஓராண்டை நிறைவு செய்​துள்ளது. இந்த ஓராண்​டில் மட்டும் அங்காடி மூலம் ரூ.51 லட்சத்​துக்கு சுய உதவிக் குழுக்​களின் பொருட்கள் நகர்ப்பு​றங்​களில் ​விற்​பனை​யாகி உள்ளதாக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE