அரசுப் பள்ளி ஆசிரியர் படுகொலை தமிழகம் முழுவதும் டிட்டோஜேக் போராட்டம்

By KU BUREAU

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர் கொலை செய்​யப்​பட்டதை கண்டித்து தமிழகம் முழு​வதும் டிட்​டோஜேக் கூட்​டமைப்​பினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட்​டனர். தஞ்சாவூர் மல்லிப்​பட்​டிணம் அரசுப் பள்ளி வகுப்​பறை​யில் கற்பித்தல் பணியில் ஈடுபட்​டிருந்த ஆசிரியை ரமணி நேற்று கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்​வலையை ஏற்படுத்​தி​யுள்​ளது.

இந்நிலை​யில் ஆசிரியர் கொலையை கண்டித்தும், பணிப் பாது​காப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்​தி​யும் தமிழ்​நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்​கங்​களின் கூட்டு நடவடிக்கைக்​குழு (டிட்​டோஜேக்) சார்​பில் தமிழகம் முழு​வதும் நேற்று ஆர்ப்​பாட்டம் நடத்​தப்​பட்​டது. அதன்படி சென்னை எழும்​பூரில் உள்ள மாவட்ட முதன்​மைக் கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் நூற்றுக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்​கமிட்​டனர்.

தொடர்ந்து போராட்​டக்​குழு​வினர் கூறும்​போது, “தற்​போதைய சூழலில் எங்கிருந்து தாக்​குதல் வருமோ என்ற அச்சத்​தில் பணிபுரிய வேண்டிய சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்​பட்​டுள்​ளனர்.

இந்நிலை மாற மருத்துவர் உள்ளிட்ட அரசுத் துறை​யினருக்கு உள்ளதைப் போல் ஆசிரியர்​களுக்​கும் பணிப் பாது​காப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனே அமல்​படுத்த வேண்​டும்​''என்​றனர். இதேபோல், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் (எஸ்​எஸ்​டிஏ) உள்ளிட்ட சில அமைப்பு​களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பள்​ளிக்கு வருகை தந்து தங்​கள் எ​திர்ப்பை ப​திவு செய்​தனர் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE