​மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி; தமிழக உள்துறை செயலர், டிஜிபியுடன் ஆலோசிக்க வேண்டும்: பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு

By KU BUREAU

சென்னை: தமிழகத்​தில் மாவட்ட நீதி​மன்​றங்​களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி​யுடன் ஆலோசனை நடத்தி பரிந்​துரை அளிக்க தமிழ்​நாடு பார் கவுன்​சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர​விட்​டுள்​ளது.

ஓசூரில் வழக்​கறிஞர் கண்ணன் என்பவர் மீது நேற்று ​முன்​தினம் சரமாரியாக தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதையடுத்து, வழக்​கறிஞர்கள் மீதான தாக்​குதலை தடுக்க நடவடிக்கை எடுக்​க ​கோரி தமிழ்​நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்​சில் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல மனு தாக்கல் செய்​யப்​பட்​டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்​.ராம், நீதிபதி செந்​தில்​கு​மார் ராமமூர்த்தி அமர்​வில் விசா​ரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்​கறிஞர் எஸ்.பிர​பாகரன் ஆஜராகி கூறிய​தாவது: தவறிழைக்​கும் வழக்​கறிஞர்கள் மீது பார் கவுன்​சில் சார்​பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்​தில் வழக்​கறிஞர்கள் கொலை செய்​யப்​படுவது மற்றும் தாக்​கப்​படுவது தொடர் கதையாகி வருகிறது. இவற்றை தடுக்க மாவட்​டங்​களில் உள்ள நீதி​மன்றங்​களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்​டும். இவ்வாறு அவர் கோரினார்.

பின்னர் நீதிப​தி​கள், “வழக்​கறிஞர் தாக்​கப்​பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கி​விட்​டதா? கைது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​ட​தா?” என கேள்வி எழுப்​பினர். மேலும் அவர்​கள், “இச்​சம்​பவம் தனிப்​பட்ட காரணங்​களுக்காக நடந்​துள்ள நிலை​யில், ஒவ்வொரு நபருக்​கும் பாது​காப்பு அளிப்பது இயலாத காரி​யம்” என கருத்து தெரி​வித்​தனர். தொடர்ந்து, வழக்​கறிஞர்கள் மீதான தாக்​குதல் சம்பவங்​களை தடுக்​க​வும், மாவட்ட நீதி​மன்​றங்​களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்​பாக​வும் உள்துறை செயலர் மற்றும் டிஜிபி​யுடன் ஆலோசனை நடத்தி பரிந்​துரைகளை அளிக்க தமிழ்​நாடு பார் கவுன்​சிலுக்கு உத்தர​விட்​டனர்.

வழக்​கறிஞர்கள் ஆர்ப்​பாட்டம்: இதற்​கிடையே, ஓசூர் சம்பவத்​தைக் கண்டித்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில், வழக்​கறிஞர்கள் சங்கங்கள் சார்​பில் போராட்டம் நடைபெற்​றது. இதில் பங்கேற்ற வழக்​கறிஞர்கள் சாலை​யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்​ட​தால், என்எஸ்சி போஸ் சாலை​யில் போக்கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. பின்னர் செய்தி​யாளர்களிடம் பேசிய உயர் நீதி​மன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், “வழக்​கறிஞர் கண்ணனை தாக்கியவர் மீது கடுமையான பிரிவு​களில் தண்டனை வழங்க வேண்​டும். வழக்​கறிஞர்​கள்​ பாது​காப்​பு மசோ​தாவை உடனடியாக அமல்​படுத்​த வேண்​டும்​” என்​றார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE