மோசமான வானிலை: சென்னை - தூத்துக்குடி விமானம் மதுரையில் தரையிறக்கம்-  அமைச்சர் ஏவ.வேலு, பயணிகள் தவிப்பு

By என்.சன்னாசி

மதுரை: மோசமான வானிலை காரணமாக சென்னை- தூத்துக்குடி விமான மதுரையில் தரையிறங்கியது. அமைச்சர் ஏவ.வேலு உள்ளிட்ட பயணிகள் கார்கள் மூலம் தூத்துக்குடி பகுதிக்கு சென்றனர்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரையில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் அமைச்சர் ஏவ.வேலு உட்பட 77 பயணிகள் பத்திரமாக இங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் தூத்துக்குடிக்கு காலை 7.35 சென்றடைவது வழக்கம்.

இதன்படி, இன்று காலை 6.26 மணியளவில் அமைச்சர் ஏவ.வேலு உட்பட 77 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம், தூத்துக்குடி விமான நிலையம் அருகே நெருங்கும்போது, மோசமான வானிலை, அதிக மேக மூட்டம் காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தை சென்றடைய முடியாமல் மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணித்த அமைச்சர் ஏவ.வேலு உட்பட 77 பயணிகளும் பத்திரமாக மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக இறங்கினர். இதன்பின், கார்கள் மூலம் தூத்துக்குடி உள்ளிட்ட அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இச்சம்பவம் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE