சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.56,920-க்கு விற்பனையானது.
கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை இறங்குமுகமாகவே இருந்தது. பவுனுக்கு ரூ.3 ஆயிரம் வரை குறைந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தங்கம்விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. கடந்த 19-ம் தேதி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,065-க்கும், ஒரு பவுன் ரூ.56,520-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.50 என பவுனுக்கு ரூ.400 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,115-க்கும், ஒரு பவுன் ரூ.56,920-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் விலை ரூ.60,960 ஆக இருந்தது. வெள்ளி விலை நேற்றும் ஒரு கிராம் ரூ.101 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.1,01,000 ஆகவும் இருந்தது.