பதுவஞ்சேரி | 600 ஏக்கர் விளைநிலங்களை கையகப்​படுத்த முயலும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்​பாட்டம்

By KU BUREAU

பதுவஞ்சேரி: மத்திய அரசின் ‘அம்​ரூத்’ திட்​டத்​தின் கீழ், தாம்​பரத்தை அடுத்த மாடம்​பாக்​கம், அகரம் தென் மற்றும் கோவி​லாஞ்​சேரி கிராமங்​களில், நகர்ப்புற நில மேம்​பாட்டுக்காக சுமார் 600 ஏக்கர் நிலம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.

தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பகுதி​யில், தரமான சாலை, பூங்​காக்​கள், பள்ளிகள் அமைக்​கப்​படு​வதுடன், முறையாக மனைப் பிரிவுகள் பிரிக்​கப்​பட்டு, சகல வசதி​களுடன் தலை சிறந்த குடி​யிருப்புப் பகுதி​களாக மாற்றும் திட்டம் செயல்​படுத்​தப்​பட​வுள்​ளது.

திமுக அரசு பொறுப்பு ஏற்றது முதல் இந்த திட்​டத்தை செயல்​படுத்த முடிவு செய்​யப்​பட்டது. இதற்காக தீவிரப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், விவசா​யிகள் பொது​மக்​களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்​றது. இதில் விவசா​யிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதனால் எந்த முடிவு எட்டப்​படாமல் கூட்டம் முடிந்​தது.

இந்நிலை​யில் இந்த திட்​டத்தை செயல்​படுத்தக் கூடாது என வலியுறுத்தி செங்​கல்​பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்​பில் தாம்​பரம் அருகே மாடம்​பாக்கம் பதுவஞ்​சேரி​யில் நேற்று கண்டன ஆர்ப்​பாட்டம் நடைபெற்​றது. முன்​னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, மாவட்ட செயலாளர் சிட்​லபாக்​கம் ச.ராஜேந்​திரன், எம்​எல்ஏ தன்​சிங் ஆகியோர் ஆர்ப்​பாட்​டத்​தில்​ பங்​கேற்​றனர்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE