ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துக்கால் கடற்கரை பகுதியில் அலையாத்தி காடுகள் வளர்க்கும் திட்டம் செவ்வாய்கிழமை துவங்கப்பட்டது.
புயல், வெள்ளப்பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களில் இருந்து நிலப் பகுதியை காப்பதில் சதுப்பு நிலங்களில் உள்ள அலையாத்தி மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள பாம்பன், மண்டபம், கீழக்கரை, காரங்காடு, உப்பூர் ஆகிய பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் உவர் நிலம் கண்டறியப் பட்டு அங்கு அலையாத்தி காடுகள் உற்பத்தி மற்றும் பாதுகாப்புப் பணிகள் வனத்துறை, தன்னார்வ அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமேசுவரம் தீவில் அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் உதவியுடன் மணல் மேடுகள் பாதுகாப்புத் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பாம்பன் குந்துக்கால் கடற்கரை பகுதியில் 1,600 அலையாத்தி (Mangrove) கன்றுகள் நேற்று நடப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டோர் அனைவரும் மணல் மேடுகள் மற்றும் அலையாத்தி காடுகளைப் பேணிப் பாதுகாப்பது தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
» உதகை: கூட்டுறவு வார விழாவில் ரூ.3.44 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கல்
» மோசமான ஊழல் நிறைந்த மக்கள் விரோத ஆட்சியை பார்த்ததில்லை: நாராயணசாமி வேதனை