தமிழகத்தில் முதலீட்டுக்கு ரூ.7 லட்சம் கோடி தேவை: 16-வது நிதிக்குழுவிடம் முதல்வர் அளித்த அறிக்கையில் கோரிக்கை

By KU BUREAU

சென்னை: தமிழகத்​தின் முதலீட்டுக்காக ரூ.6.84 லட்சம் கோடி நிதி தேவைப்​ படு​வதாக 16-வது நிதிக்​குழு​விடம் அளித்த அறிக்கையில் கோரப்​பட்​டுள்​ளது.

மத்திய அரசின் 16-வது நிதி ஆணையக் குழு​வினர் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமை​யில் நேற்று முன்​தினம் தமிழகம் வந்தனர். தொடர்ந்து, நேற்று முதல்வர் மு.க.ஸ்​டா​லின், அமைச்​சர்​கள், அதிகாரி​களுடன் ஆலோசனை நடத்​தினர். அப்போது தமிழக அரசின் சார்​பில் பல்வேறு பரிந்​துரைகள், கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை அளிக்​கப்​பட்​டது. அதில் இடம்​பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு: விரைவான நகரமயமாக்​கல், அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்​கள், உட்கட்​டமைப்பு நிதி​யுதவி​கள், அதிகளவிலான வயது முதிர்ந்த மக்கள் உள்ளிட்ட பல முக்​கியமான சவால்களை தமிழகம் எதிர்​கொள்​கிறது. எனவே, மத்திய அரசால் பகிர்ந்​தளிக்​கப்​படும் நிதி​யில் இருந்து குறைந்த பட்சம் 50 சதவீதம் மாநிலங்​களுக்கு பகிர்ந்​தளிக்க வேண்​டும்.

வரி அல்லாத வருவாய்​களை​யும் பகிர்ந்​தளிக்​கப்​படும் நிதி தொகுப்​பில் இணைக்க உரிய அரசமைப்பு சட்டங்கள் மேற்​கொள்ள நிதிக்​குழு பரிந்​துரைக்க வேண்​டும். அல்லது பகிர்ந்​தளிக்​கக்​கூடிய தொகுப்​பில் மாநிலங்​களுக்கான பங்கை அதிகரிக்க வேண்​டும். மேல் வரி மற்றும் கூடுதல் கட்ட​ணங்கள் 10 சதவீதத்​துக்கு மிகாமல் வரையறுக்க வேண்​டும். அதற்கு மேல் வசூலித்​தால் பகிர்ந்​தளிக்​கப்​படும் தொகுப்​பில் இணைக்க வேண்​டும்.

மாநில அரசின் பட்டியலில் இடம்​பெற்றுள்ள இனங்​களின்​கீழ் நிறைவேற்​றப்​படும் நலத்​திட்​டங்​களுக்கு மத்திய அரசு 75 சதவீத பங்களிப்பை வழங்க வேண்​டும். அதிக செயல்​திறன் கொண்ட தமிழகம், 9-வது நிதிக்​குழு பரிந்​துரைக் காலம் முதல் வருமான இடைவெளி அளவு​கோல் மற்றும் நீக்​கப்​பட்ட வரிவசூல் அளவு​கோல்​களால் ரூ.3.57 லட்சம் கோடி இழப்பை சந்தித்​துள்ளது.

வருமான இடைவெளி, பரப்​பளவு மற்றும் வனம் மற்றும் சுற்றுச்​சூழல் ஆகிய​வற்றுக்கு வழங்​கப்​படும் மதிப்​பீட்டை நிதிக்​குழு​வானது குறைத்து பரிந்​துரைக்க வேண்​டும். மக்கள் தொகை செயல்​திறனுக்கு வழங்​கப்​படும் மதிப்​பீட்டை அதிகரிக்க வேண்​டும். பொருளாதார வளர்ச்​சிக்கான பங்களிப்பு மற்றும் நகரமய​மாக்கல் போன்ற புதிய அளவுகோல்களை நிதிக்​குழு​வானது கிடைமட்ட பகிர்​வுக்கான வரை முறை​யில் இணைக்க வேண்​டும்.

அதற்கு மாற்றாக 2-வது தீர்வாக 16-வது நிதிக்​குழு​வானது, மாநிலங்​களுக்​கிடையிலான பகிர்வு நிதியை தீர்​மானிக்க குறைந்த அளவிலான பயனுள்ள அளவு​கோல்​களில் எளிமையான வரைமுறையை பரிந்​துரைக்​கலாம். நுகர்​வோர் திறனை கருத்​தில் கொண்டு வருமான இடைவெளி சரிசெய்​யப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்​கீடு 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்​படை​யில் எடுத்​துக் கொள்​ளப்பட வேண்​டும். மக்கள் தொகை செயல்​திறன், பொருளா​தா​ரத்​துக்கான பங்களிப்பு மற்றும் நகரமய​மாக்​கலுக்கான பங்கு ஆகிய​வற்றின் அடிப்​படை​யில் கிடைமட்ட பங்குக்கான வரைமுறைகள் பரிந்​துரைக்​கப்பட வேண்​டும்.

பேரிடர் மேலாண்மை: மாநில பேரிடர் மேலாண்மை நிதியை 2026-27-ம் ஆண்டில் 50 சதவீதமாக உயர்த்தி, 90-க்கு 10 என்ற அளவில் மத்திய மற்றும் மாநில நிதிப்​பங்​கீட்​டில் வழங்க வேண்​டும். பரிந்​துரைக்கால நிதியை 10 சதவீதமாக உயர்த்த வேண்​டும். கடற்கரை நீளம், நகரமய​மாக்கல் போன்ற வரையறை உள்ளிட்ட புதிய குறி​யீடு​களுடன் பேரிடர் குறி​யீடுகள் மாற்றியமைக்​கப்பட வேண்​டும்.

நகர்ப்புற வெள்ளம் (ரூ.2,500 கோடி), வறட்சி ரூ.2,000 கோடி, கடலோர மேலாண்மை ரூ.1,000 கோடி ஆகியற்றுக்கு குறிப்​பிட்ட நிதியை ஒதுக்க வேண்​டும். உள்ளாட்சி அமைப்பு​களுக்கு பகிர்ந்​தளிக்​கப்​படும் வருவா​யில் குறைந்தபட்சம் 5 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்​கப்பட வேண்​டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு​களுக்கு 50-க்கு 50 என்ற விகித அடிப்​படை​யில் மானி​யங்கள் ஒதுக்க வேண்​டும்.

தமிழகத்​துக்கு, தொழில் மயமாக்​கலுக்கான முதலீட்டுக்கு ரூ.43,600 கோடி, நகர்ப்புற உட்கட்​டமைப்​புக்கு ரூ.5.32 லட்சம் கோடி, மின்​துறைக்கு ரூ.62,000 கோடி, பேருந்​துகள் மற்றும் பொதுப்​போக்கு​வரத்து முறைகளை நவீனப்​படுத்த ரூ.7,000 கோடி, நீலப் பொருளா​தா​ரத்தை மேம்​படுத்த ரூ.5,000 கோடி, 2 மற்றும் 3-ம் நிலை சுகாதார உட்கட்​டமைப்​புக்கு ரூ.5,000 கோடி, விளை​யாட்டு வசதி​கள், மின்​னாளுமை முயற்சி​களுக்கு தலா ரூ.1,000 கோடி, நீர்​நிலை, நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்​புக்கு ரூ.5,000 கோடி, பாரம்​பரிய கட்டிடங்கள் பாது​காப்பு, சுற்றுலாத் துறை வளர்ச்​சிக்கு தலா ரூ.1,200 கோடி, ​மாற்றுத்​திறனாளி​களுக்கான கட்​டமைப்பு​களுக்கு ரூ.500 கோடி, குடிநீர் வழங்கல் மற்றும் கழி​வுநீர் மறுசுழற்சிக்கு ரூ.20,000 கோடி என ரூ.6 லட்​சத்து 84,500 கோடி ​முதலீட்டுக்கான தேவை உள்​ளது. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE