46 ஆண்டுகள் நிலுவை வழக்கில் சுமுக தீர்வு: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மகிழ்ச்சி

By KU BUREAU

மதுரை: விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகேயுள்ள புதுப் பாளையம் சக்கராஜாகோட்டை நந்தவனத்துக்குச் சொந்தமான சொத்தில் வாடகைக்கு இருந் தோரைக் காலி செய்வது தொடர் பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 46 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. வழக்குத் தொடர்ந்தவர், வாடகை தாரர்கள் பலர் இறந்த நிலையில், அவர்களின் வாரிசுதாரர்கள் வழக்கை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு பல ஆண்டு களாக நிலுவையில் இருந்ததால், உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது. இவ்வழக்கை நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி விசாரித்தார். சுமுகத் தீர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த வழக்கு சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பப்பட் டது. அங்கும் சமரசம் ஏற்படாமல் வழக்கு மீண்டும் நீதிமன்றம் வந்தது.

பின்னர் விசாரணை முடிக்கப் பட்டு, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப் பட்டது. தீர்ப்பு நாளில், மூடி முத் திரையிட்ட உறையில் தீர்ப்பு தயாராக இருப்பதாகவும், அதைப் பிரித்துப் படிப்பதற்கு முன்பு, இந்த விவகாரத்தை இரு தரப்பினரும் வழக்கறிஞர்கள் உதவியுடன் சுமுகமாக முடிக்க விரும்பினால், இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தி, அறிக்கைதாக் கல் செய்யுமாறும் உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளி

வைத்தார். மீண்டும் வழக்கு விசார ணைக்கு வந்தபோது, இரு தரப் பிலும் சமரசமாகச் செல்வதாக மனுத் தாக்கல் செய்தனர். இதை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கு நீதி மன்றத்துக்கு பல கலவையான உணர்வுகளைத் தந்துள்ளது. பழைய வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது. பழைய வழக்காக இருந்தாலும், அது கவனம் பெற வேண்டும். பழைய வழக்குகளை விரிவாக விசாரிக்க வேண்டும். 46 ஆண்டுகால வழக்கு சுமுகமாக முடித்து வைக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE