நாகர்கோவில்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் விஜய்க்கு, உலக அளவில் சுற்றுச்சூழல் தூய்மைக்கான விழிப்புணர்வு பணியை சிறப்பாக செய்ததற்காக இத்தாலியின் உயரிய விருதான குல்பா விருது வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை அடுத்த காருபாறையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் விஜய் (44). லண்டனில் வசித்து வரும் இவர் உலகின் பல நாடுகளுக்கும் சென்று சுற்றுச்சூழலை தூய்மைபடுத்துவதற்கான விழிப்புணர்வு பணியை மேற்கொண்டு வருகிறார். இப்பணியை பாராட்டி அவருக்கு இத்தாலி நாட்டின் உயரிய விருதான நைத்துட் குல்பா விருது அறிவிக்கப்பட்டது.
இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பாரம்பரியமுறைப்படி குல்பா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இவ்விருதை பெறுவது இதுவே முதல்முறையாகும்.
விருதுபெற்ற விஜய், குல்பா விருதை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். அவருக்கு தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
» விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: மதுரையில் மக்கள் ஆர்ப்பாட்டம்