செங்கல்பட்டு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா செங்கல்பட்டில் நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்ட விழா, சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு தொடக்க விழா, முற்போக்கு பொதுவுடைமை கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா தமுஎகச - செங்கல்பட்டு மாவட்டக்குழு நேற்று மாலை செங்கல்பட்டில் நடைபெற்றது.
முப்பெரும் விழாவிற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கவிசேகர் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் என்.டி. அரங்கநாதன் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் இ.சங்கரதாஸ் தமுஎகச கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
கவிஞர் ஆயிஷா தமிழ் ஒளியின் கதைகளில் ஒன்றை சொல்லி சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பாதுகாக்கும் போராட்டத்தையும் ஒன்றிணைத்து கவிஞர் தமிழ் ஒளி போராடியதையும் சுட்டிக்காட்டி பேசினர்.
» விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: மதுரையில் மக்கள் ஆர்ப்பாட்டம்
தமுஎகச - மாநிலக்குழு உறுப்பினர் கு.ஆறுமுகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து கிளைகளும் உயிரோட்டமாக செயல்படுகின்றது. தொடர்ந்த செயல்பட வேண்டும், புதிய புதிய முற்போக்கான படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என கூறி வாழ்த்துரை வழங்கினார். மக்களிசை பாடல்களை தமுஎகச-வின் பாடகர்கள்: ஸ்டாலின்குமார், அ.சரண்யா, கு.முகுந்தன் ஆகியோர் பாடினார்கள். தமுஎகச-வின் மாநிலக்குழு உறுப்பினர் பாவலர். சு.சண்முகசுந்தரம் தமிழ்ஒளி எனும் பெருங்கவிஞன் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
நிறைவாக தமுஎகச-வின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிந்துவெளி அகழாய்வு உண்மையும் திரியும் எனும் தலைப்பில் மக்கள் மொழியில் ஹரப்பா, மொகஞ்சதாரோ முதல் சிவகங்கை மாவட்டம் கீழடி எனும் வைகை நதிக்கரை நாகரீகம் சங்க இலக்கியம் - சிந்து வெளி - கீழடி ஆகியவைகளில் சாதி, மதம் இல்லாத நாகரீகத்தின் ஒற்றுமையை எடுத்துரைத்து நிறைவுரை ஆற்றினார். சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் மு.முனிச்செல்வம் நன்றி கூறினர்.