2026-ல் அமையும் கூட்டணி ஆட்சியில் பாமக இடம்பெறும்: அன்புமணி உறுதி

By KU BUREAU

சென்னை: சென்னை கொரட்டூரில், ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை பாமக தலைவர் அன்புமணி தொடங்கி வைத்து, பாட்மிண்டன் விளையாடினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளை நடத்துவதற்கு, தமிழகத்தில் இண்டோர் ஸ்டேடியம் அமைக்க அமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். திமுக கொடுத்த 520 தேர்தல் வாக்குறுதிகளில், 490 நிறைவேற்றவில்லை. தமிழகத்தை 57 ஆண்டுகளாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். முறையாக வடிகால் கட்டுமானங்கள் அமைக்கப்படவில்லை. 2026-ல் கூட்டணி ஆட்சி அமையும். அந்த கூட்டணியில் பாமக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE