ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் பரவலான மழை

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் பரவலான மழை பெய்தது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் கனமழை வரையிலும் பெய்யக்கூடும் எனவும், கடரேலார மாவட்டங்களில் பரவலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பரவலான மழை பெய்தது. மழையால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அமைந்துள்ள நான்கு ரத வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் ராமேசுவரம் தீவின் பல்வேறு தாழ்வான பகுதிகள் முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போலக் காணப்பட்டது. இதனால் ராமேசுவரம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் சிரமப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பனில் அதிகப்பட்சமாக 22.00 மி.மீ மழை பதிவானது. தங்கச்சிமடம் 21 மி.மீ, மண்டபம் 18.60 மி.மீ, ராமேசுவரம 5 மி.மீ மழையும் பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE