சிறு வணிகர்கள் கடை வாடகைக்கு 18% ஜிஎஸ்டி: மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

By KU BUREAU

சென்னை: வியாபாரிகளின் கடை வாட கைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்த அறிக்கை: பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதி லிருந்தே கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவதையும், சிறு, குறு தொழில்முனைவோர், சிறு வணிகர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை அமலாக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்.23-ல் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கெனவே கடுமையாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு வணிகர்களை மேலும் மோசமான நிலைக்கு தள்ளிவிடும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள பாஜக அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது, மத்திய பாஜக அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக திரும்பப் பெறவேண்டுமெனவும் வலியுறுத்து கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE