சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள்

By KU BUREAU

சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜை நாளை (நவ.16) தொடங்குகிறது. இதற்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன் விவரம் வருமாறு: நவம்பர் 19 முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 19 முதல் ஜனவரி 14 வரை செவ்வாய்தோறும் இரவு 11.20 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06111), மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து நவம்பர் 20 முதல் ஜனவரி 15 வரை புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06112), மறுநாள் முற்பகல் 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு உள்ளிட்ட நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 20 முதல் ஜனவரி 15 வரை புதன்தோறும் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் ஏ.சி. வசதியுள்ள ‘கரீப் ரத்’ (ஏழைகள் ரதம்) வாராந்திர சிறப்பு ரயில் (06119), மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து நவம்பர் 21 முதல் ஜனவரி 16 வரை வியாழன் தோறும் காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06120), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

தலா 9 சேவை இதுதவிர, சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே 2 வாராந்திர சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. மேற்கண்ட அனைத்து ரயில்களும் இரு மார்க்கமாகவும் தலா 9 சேவைகள் இயக்கப்பட உள்ளன. இதுபற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE