இலவச வேட்டி, சேலை ஜனவரி 15-க்குள் வழங்கப்படும்: அமைச்சர் காந்தி உறுதி

By KU BUREAU

ராணிப்பேட்டை: பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகள் வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரூ.15 கோடியில் விளையாட்டு வளாகம் கட்டப்பட உள்ளது. அமைச்சர் ஆர்.காந்தி நேற்று பூமிபூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாமதம் ஏன்? மக்களவைத் தேர்தல் காரணமாக, பொங்கல் இலவச வேட்டி, சேலை பணிகள் தாமதமாகின. கடந்த ஆண்டு டிச.31-ம் தேதிக்குள் அனைத்து வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டன. வரும் ஆண்டு ஜனவரி 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் இலவச வேட்டி, சேலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, பொங்கல் பண்டிகைக்குள் அனைவருக்கும் வேட்டி, சேலை வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE