தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: சென்னையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் இன்று (நவ.14) தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்தம், தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு தமிழக அரசு மருத்துவர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் ஏ.வினோத் தலைமை வகித்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் தஞ்சாவூர் கிளைத் தலைவர் ரவீந்திரன், செயலாளர் சரவணவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில், பணியில் உள்ள மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும். மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். மருத்துவத்துறையில் தமிழகம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருத்துவமனைகளில் பாதுகாப்புகாக கூடுதல் காவல்துறையினரை நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர். மருத்துவர்கள் போராட்டத்தின் காரணமாக, அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே இயங்கியது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவு செயல்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE