காஞ்சிபுரம்: புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்துவிட்டு மருத்துவர்கள் போராட்டம்

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து விட்டு இந்திய மருத்துவர்கள் சங்கக்தின் காஞ்சிபுரம் கிளை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து இந்தப் போராட்டம் இன்று (நவம்பர் 14ம் தேதி) நடைபெற்றது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மருத்துவர் சு.மனோகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மருத்துவமனைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், மாநில அசு அரசு மருத்துவமனைகளில் மருத்துவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் கிளைச் செயலர் தன்யகுமார், பொருளர் ஞானகணேஷ், இணைச் செயலர் முத்துக்குமரன் உள்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் புறநோயாளிகள் பிரிவை மட்டும் புறக்கணித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE