சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதா வது: மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டநபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திட வும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண், மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்தார். கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி உடன் இருந்தனர். பின்னர், அருண் கூறும்போது, “தமிழகத்தில் இதுபோன்றசம்பவம் முதல் முறையாக நடந்துள்ளது. கத்திக்குத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. சென்னையில் அரசுமருத்துவமனைகளில் காவல்நிலையங்கள், புறக்காவல் நிலையங்கள் உள்ளன. மருத்துவ மனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது” என்றார்.
» பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி
» தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் ஓலைச் சுவடிகளை பார்வையிட்ட ஆளுநர்
இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், சி.கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தனர்.