திருப்பூர்: நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வேலம்பட்டி சுங்கச்சாவடியை திறக்க ஆயத்தமானதை தொடர்ந்து, விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் இன்று (நவ. 12) இரவு முழுக்க சுங்கச்சாவடியில் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர்.
திருப்பூர் தெற்கு வட்டம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடி புதன்கிழமை (நவ.13) திறக்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில், காத்திருப்பு போராட்டத்தை சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக்குழு அறிவித்தது. இதையடுத்து திருப்பூரில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதில், எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதையடுத்து இன்றிரவு (நவ.12) முதல் சுங்கச்சாவடியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக, போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே பணியில் இருந்த வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுங்கச்சாவடியை அகற்ற பிறபிக்கப்பட்ட உத்தரவு உள்ளிட்டவைகளை மதிக்காமல், சுங்கச்சாவடி திறப்பதற்கான வேலை பணிகள் நடந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து இன்றிரவு பல்வேறு பொது நல அமைப்புகளும், விவசாய சங்கங்களும், சமூக ஆர்வலர்களும், அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து, வேலம்பட்டி சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பு அகற்றும் போராட்டத்தை துவங்கினர். நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட சுங்கச்சாவடியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, இன்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அங்கு திரண்டு வருகின்றனர்.
» கனமழை எச்சரிக்கை முதல் கஸ்தூரிக்கு எதிரான அரசின் வாதம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்
» சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் இரவில் இலவச சைக்கிள் வழங்கியதால் மாணவர்கள் சிரமம்
தொடர்ந்து இரவு முழுக்க சுங்கச்சாவடி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு அவிநாசிபாளையம் போலீஸார் மற்றும் மாவட்ட போலீஸார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.