ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, பருத்தித்துறை அருகே இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.
நாகை மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர். சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்களை 12 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
நேற்று முன் தினம் நவம்பர் 10ம் தேதி தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இருப்பது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரும் நவம்பர் 25ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
» சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு!
» அதிமுக களஆய்வு குழு அறிக்கை வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் - பழனிசாமி அறிவுறுத்தல்