கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஊத்தங்கரை, சந்தூர் ஆகிய பகுதிகளிலும் இந்த அதிர்வு உணரப்பட்டது.
இன்று பிற்பகல் 1.32 மணியளவில் பூமிக்கு கீழே 5 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது. இதனால் எந்தவித பாதிப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை.
அதேபோல, தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. சம்பங்கி மார்தொட்டி, முனியப்பன் கோவில் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்ட லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.9ஆக பதிவாகியுள்ளது.
» துறையூர் காவல் நிலையத்துக்கு பூட்டுப் போட முயற்சி: விவசாய சங்கத் தலைவர் கைது
» தென்திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில் புஷ்ப யாக வைபவம்: 51 வகையான மலர்களால் மலர் அபிஷேகம்