வீரமாமுனிவரின் 344-வது பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை

By ரெ.ஜாய்சன்

கோவில்பட்டி: தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் 344-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள‌ வீரமாமுனிவர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, புனித பரலோக மாதா பேராலய பங்குத் தந்தை அந்தோணி குரூஸ், காமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் க.கலைச்செல்வி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE