சென்னை: கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற 2 அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி தனது எக்ஸ் வலைதள பதிவில் நேற்று கூறியுள்ளதாவது: கோவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 5-ம் தேதி பங்கேற்ற 2 அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடப்பட வில்லை. அன்னை தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் வகையிலான தமிழக அரசின்இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக் கது. தமிழக பொதுத்துறை கடந்த 2021 டிச. 17-ம் தேதி வெளியிட்ட 1037-7(இ) அரசாணையை முதல்வரே மீறியதை ஏற்கமுடியாது. திருப்பூரில் கடந்த 2019 பிப்ரவரி 10-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததை, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் சுட்டிக்காட்டி கண்டித்தார்.
2 வாரங்களுக்கு முன்பு ஆளுநர் பங்கேற்ற சென்னை தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு வரி விடுபட்டதை சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், “திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்த பதவி வகிக்கவே தகுதியற்றவர்” என்று ஆளுநரை விமர்சித் தார். இந்த விமர்சனம் தனக்கும் பொருந்துமா என்பதை முதல்வர்தான் கூற வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதை தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வு மிக்க குடிமக்களால் சகித்துக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.