டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நவ.8 முதல் கனமழை

By KU BUREAU

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.4) முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, நவ.8-ம் தேதிதஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவ.9,10-ம் தேதி டெல்டாமாவட்டங்கள், செங்கல்பட்டு,விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரிகாரைக்கால் பகுதிகளிலும் ஓரிருஇடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வடதமிழக கடலோரப் பகுதிகளில் நவ.7, 8-ம் தேதிகளில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்றுவீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE