தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளிலும் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
» 50 சதவீத தள்ளுபடி... இன்று அதிகாலை ஜவுளிக்கடையில் குவிந்த பொதுமக்கள்!
» தீபாவளி பண்டிகை: கோவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வித்யா கணபதி கோயில் விநாயகர்