சென்னை: மாநில மனித உரிமை ஆணையத் தலைவரான நீதிபதி எஸ்.மணிக்குமார் இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்றதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கேரள உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான எஸ். மணிக்குமார் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறி பாமகவழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ண குமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.
முன்னறிவிப்பு இன்றி... அப்போது வழக்கறிஞர் கே.பாலு, ‘‘கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 முறை அவரது இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ்பாதுகாப்பு திரும்பப் பெறப்பட் டுள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அவர் தற்போது தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பதவி வகித்து வரும் சூழலில் அவரது இல்லத்துக்கான போலீஸ் பாதுகாப்பை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விலக்கிக் கொள்வது ஏற்புடையதல்ல.
» 2 மணி நேரம் மட்டுமே அனுமதி: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு
» சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ரயில் சேவை தொடங்கியது: பயணிகள் உற்சாகம்
இதுதொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க வேண்டும்" எனக் கோரினார். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் உள்ள சம்பந்தப்பட்ட குழுவிடம் மனு அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.